エピソード

  • நல்ல பில்டரை அடையாளம் காண்பது எப்படி? | The Salary Account Podcast-40
    2023/08/29

    சொந்தமாக ஒரு வீடு, என்பதுதான் சம்பளதாரர்கள் பலருடைய வாழ்நாள் கனவே. ஆனால், அண்மைக்காலமாக பிரபல பில்டர்களின் அபார்ட்மென்ட்டுகள் குறித்து வரும் செய்திகள் பலரையும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளன. கட்டி சில ஆண்டுகளே ஆன குடியிருப்புகளில் விரிசல்கள் விழுவதும், அடிக்கடி பழுதுகள் ஏற்படுதுவதும் அதைத் தொடர்ந்து குடியிருப்புவாசிகள் போராடுவதும் அதிகரித்துள்ளன. இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்க திட்டமிட்டிருக்கும் பலரும் குழம்பிப்போயிருக்கின்றனர். எப்படி சிறந்த பில்டர்களைத் தேர்வு செய்வது, இதுபோன்ற சிக்கல்கள் எழுந்தால் என்ன செய்வது என உங்கள் பலரிடமுமே கூட எக்கச்சக்க கேள்விகள் இருக்கலாம். அவற்றிற்கு விடையளிக்கும் விதமாக, நாணயம் விகடனிடம் 'பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர் அசோசியேஷன்’ தலைவர் மணி சங்கர் பகிர்ந்துகொண்ட வழிகாட்டல்கள், இந்த வார் The Salary Account எபிசோடில் இடம்பெறுகின்றன.

    -The Salary Account Podcast.

    続きを読む 一部表示
    8 分
  • டீமேட் கணக்கில் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள்: இத்தனை நன்மைகளா? | The Salary Account Podcast
    2023/08/19

    இன்னும்கூட பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டுக்காக டீமேட் கணக்கு வைத்திருந்தாலும், தங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஃபோலியோ வடிவத்திலேயே வைத்திருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை டீமேட் வடிவில் வைத்திருப்பதன் நன்மைகளை அவர்கள் உணராமல் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். சிலர், டீமேட் வடிவில் ஃபண்ட் யூனிட்டுகளை வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் அவர்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் ஏற்கெனவே டீமேட் வடிவில் இருப்பதாகத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அவர்களுடைய ஃபண்ட் யூனிட்டுகள் பாரம்பர்ய ஃபோலியோ வடிவில்தான் இருக்கின்றன. இதுகுறித்து இன்றைய எபிசோடில் விரிவாகப் பார்ப்போம்.

    -The Salary Account Podcast

    続きを読む 一部表示
    7 分
  • உச்சத்தில் மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள்; நீங்கள் என்ன செய்ய வேண்டும்? | The Salary Account Podcast
    2023/08/12

    பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் பலரும் தங்கள் முதலீடுகளை இங்கே முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நீங்கள் இவற்றில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஏற்கெனவே முதலீடு செய்திருந்தாலோ என்ன செய்ய வேண்டும்?

    -The Salary Account

    続きを読む 一部表示
    5 分
  • டிவிடெண்ட் vs குரோத்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உங்களுக்கு ஏற்றது எது? | The Salary Account Podcast
    2023/08/07

    மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும் டிவிடெண்ட் மற்றும் குரோத் ஆப்ஷனில் எது சிறந்தது என்பதை இந்த வார The Salary Account எபிசோடில் பார்ப்போம்.

    -The Salary Account Podcast

    続きを読む 一部表示
    9 分
  • டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் ரூ.1 கோடி போதுமா? | தீர்மானிக்கும் 5 விஷயங்கள் | The Salary Account Podcast
    2023/07/29

    நம்முடைய குடும்பத்தினரின் வளமான எதிர்காலத்துக்காக சில முக்கியமான நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் நம்மவர்கள் இடையே அதிகரித்திருக்கிறது. அதில் முதன்மையான ஒன்றுதான் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் (Term Life Insurance) எடுப்பது. அதாவது, எதிர்பாராத விதமாக குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு இறப்பு ஏற்பட்டால் குடும்பத்துக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் வேலையை இந்த டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் செய்கிறது. இப்படி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் நபர்கள் பலரும் ரூ.1 கோடிக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது சரியா, உங்களுக்கேற்ற தொகை எவ்வளவு? இந்த வார The Salary Account எபிசோடில் பார்ப்போம்.

    -The Salary Account Podcast.

    続きを読む 一部表示
    5 分
  • பணத்தை சேமிக்க சிரமப்படுறீங்களா? இதோ 8 வழிகள்! | The Salary Account Podcast
    2023/07/25

    நம்மில் பெரும்பாலானோர், ‘‘பணத்தைச் சேமிக்க முடியவில்லையே, முதலீடு செய்ய பணம் இல்லையே...’’ என்று புலம்புவதைப் பார்க்க முடிகிறது. இவ்வளவுக்கும் அவர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களாக, நன்கு சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள். பிறகு, எப்படி அவர்களால் பணத்தைக் கொஞ்சம்கூட சேமிக்க முடியாமல் போகிறது.


    இதற்கு முக்கியமான காரணம், அவர்களேதான். தங்களை மனரீதியாக, செயல்ரீதியாக சிறிது மாற்றிக்கொண்டால் இவர்கள் நிச்சயம் அதிகமான அளவில் பணத்தை சேமிக்க முடியும். அதற்கான வழிகள் குறித்து இந்த வார The Salary Account எபிசோடில் விளக்குகிறார் நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன்.


    -The Salary Account Podcast

    続きを読む 一部表示
    9 分
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் மட்டும் போதாது; பின் இதுவும் செய்யவேண்டும்! | The Salary Account Podcast
    2023/07/17

    2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதை செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள், தவிர்க்கவேண்டிய தவறுகள் குறித்தெல்லாம் கடந்த வார The Salary Account எபிசோடில் நாம் பார்த்தோம். இன்றைக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்தபின் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    -The Salary Account podcast.

    続きを読む 一部表示
    6 分
  • வருமான வரிக் கணக்குத் தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! | The Salary Account
    2023/07/10

    முடிந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2023-24) வருமான வரிக் கணக்குத் தாக்கலை சம்பளதாரர்கள் 2023 ஜூலை 31-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்பது வரித்துறை நடைமுறை. பணிபுரியும் நிறுவனம், 2022-23-ம் ஆண்டுக்கான படிவம் 16-ஐ (Form 16) அளித்திருக்கும் பட்சத்தில் வரிக் கணக்கு தாக்கலை மேற்கொள்ளலாம். அப்படி நீங்கள் வரிக்கணக்குத் தாக்கல் செய்யும்போது, தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து இந்த வார The Salary Account எபிசோடில் விளக்குகிறார் ஆடிட்டர் டாக்டர் அபிஷேக் முரளி.

    -The Salary Account Podcast.

    続きを読む 一部表示
    10 分